கலாசலா கலக்குவோம்!!!!!

Mokka Movies 2011

 

 

 

 

Mokka Movies 2011   <—–   Click the link

Advertisements

என்னுடையது என்று நினைத்துதான்
இது வரையில் வளர்த்து வந்தேன்.

ஆனால்..
முதல் முறை உன்னை பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய் குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே ..
இந்த மனசு!..

************************
சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி.

**************************

உன்னை கேலி பேசுபவனை எல்லாம்
முறைத்து பார்க்கிறாய் .
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதரனமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே!..

**********************

பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணசீட்டு
வீதியில் கிடந்தது புலம்பிகொன்ன்டிருந்தது
பயணம் முடிந்து விட்டதை நினைத்து.

**********************

துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு .

***********************

தொலை பேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்கு தருகிறது.

***********************

எல்லா பெண்களும்
உதட்டை அழகாய் காட்டுவதற்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறார்கள்.
நீ மட்டும்தான் உதட்டின் அழகை மறைதுக்கொள்வதர்க்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறாய் .
*******************

எல்லா கவிதைகளுமே
உன்னை பற்றியதுதான் எனினும்
ஒரு கவிதைகூட உன்னை மாதிரி இல்லையே.

நடிகை தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் ”கொலவெறி” பாடலைப் பாடும் தனுஷ்!

 

உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தா நான் போவேன் போடா..

Superb lines….

Raajapattai

 

 

படத்தில் பாராட்டப்பட வேண்டிய மூன்று விஷயம். ஒன்று மொக்கை படம் என்று தெரிந்திருந்தும் ஏதோ தன்னால் ஆன சின்னச் சின்ன விஷயங்களுக்காக, மெனக்கெட்டு நடித்து காட்ட முயற்சி செய்த விக்ரமுக்கு. இரண்டு மதியின் ஒளிப்பதிவுக்கு. மூன்று படம் முழுக்க இயக்குனர் கே.விஸ்வநாத்தை ஹீரோவாக நடிக்க வைத்தற்கு.
ராஜபாட்டை – ராஜமொக்கை.
நன்றி- கேபிள் சங்கர்

ரசிகர்களின் கோரிக்கைக் கிணங்க மும்பை ரயில் நிலையத்தில், ‘ஒய் திஸ் கொலவெறிடி’ பாடலை நடிகர் தனுஷ் பாடினார். நடிகர் தனுஷ் நடித்து வெளி வர உள்ள படம் ‘3’. ஐஸ்வர்யா இயக்கி உள்ள இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவராத நிலையில் படத்தில் இடம்பெறும் ‘ஒய் இஸ் திஸ் கொலவெறிடி’ பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. தமிழே தெரியாத நபர்களும், இந்த பாடலை முணுமுணுத்தபடி செல்கின்றனர்.

பலர் தங்களுடைய செல்போன்களிலும் இந்த பாடலை ரிங்டோனாக வைத்துள்ளனர். மும்பையிலும் கொலவெறி பாடல் அனைத்து தரப்பினரிடையேயும் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் மும்பையில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சர்ச்கேட் ரயில் நிலையத்துக்கு வந்தார்.

அவரை பார்த்ததும் அங்கிருந்த இளம் பெண்கள் உள்பட ரசிகர்கள், ரயில் பயணிகள் கூட்டமாக கூடினர். அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கொலவெறி பாடலை பாடும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தனுஷ் கொலவெறி பாடலை பாடினார். அந்த பாடலுக்கு இளம் பெண்களும், ரசிகர்களும் ஆட்டம் போட்டனர். பின்னர் தனுஷ் ஓவல் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார்

கமல்ஹாசன் அலுவலகத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை முதலில் வரவேற்பது இந்த மேட்ச்லெஸ் பைக்தான். 1954-ம் ஆண்டு மாடலான இந்த பைக், கமல்ஹாசனின் ஃபேவரிட்! ‘ஹே ராம்’ படத்துக்காக வின்டேஜ் பைக்குகளைத் தேடியபோதுதான் உலக நாயகன் கண்களில் இந்த பைக் சிக்கியதாம். பைக் பிறந்த ஆண்டில்தான் கமல்ஹாசனும் பிறந்தார் என்பது பைக்கின் மீது அவரது காதலை இன்னும் அதிகரித்துவிட்டதாம். படத்துக்காக மட்டுமல்லாமல், சொந்தமாகவும் இந்த பைக்கை வாங்கி விட்டார் கமல். அன்று முதல் இன்று வரை பொக்கிஷமாக இந்த பைக்கைப் பாதுகாத்து வருகிறார்!

– நன்றி மோட்டர் விகடன்

Tag Cloud